தமிழ்நாடு அரசானது 80 மீன்பிடிப் படகுகளுக்கு நாவிக் (NavIc) என்ற கருவியால் இயங்கும் செயற்கைக்கோள் செயலாக்கம் பெற்ற 200 தகவல் தொடர்பு சாதனங்களை வழங்கியுள்ளது.
இந்த சாதனங்களானது தமிழக மீனவர்கள் நிகழ்நேர அடிப்படையில் புயல் மற்றும் வானிலை தகவல்களைப் பெற உதவும்.
நாவிக் (Navigation with Indian Constellation- NavIC) என்பது அமெரிக்காவின் GPS-ன் (புவிசார் இடங்காட்டி அமைப்பு) இந்திய பதிப்பு என பொருள் கொள்ளலாம்.
இலவசமாக வழங்கப்பட்ட இந்த சாதனங்கள் மூலம் வழங்கப்படும் எச்சரிக்கைகள் தமிழ்மொழியில் இருக்கும்.