தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கையானது, எட்டு லட்சம் குறைந்து 6.12 கோடிக்கு மேல் உள்ளது.
இதில் 3.11 கோடி பெண்கள், 3.01 கோடி ஆண்கள் மற்றும் 7,900க்கும் மேற்பட்டோர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியாகும்.
இதில் 3.15 கோடி பெண்கள், 3.04 கோடி ஆண்கள் மற்றும் 8,000க்கும் மேற்பட்டவர்கள் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியானது 6,51,077 வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதியாகத் தொடர்ந்து திகழ்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 4,54,919 வாக்காளர்களுடன் கோவை மாவட்டத்தின் கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதி இடம் பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தின் துறைமுகம் என்ற ஒரு சட்டமன்றத் தொகுதியானது 1,69,292 வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி 1,69,750 என்ற அளவு வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது தொகுதியாக உள்ளது.