2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையின் போது, ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் விலங்குகள் சரணாலயம் என்ற புதிய வனவிலங்குச் சரணாலயம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தமிழகத்தின் 18வது வனவிலங்குச் சரணாலயம் ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இரண்டு வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சரணாலயத்தில், முக்கியமாக யானைகள், புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் ஆகிய பல விலங்குகள் இடம் பெற உள்ளன.
21 வெவ்வேறு வகையான பாலூட்டிகள், 139 பறவை இனங்கள் மற்றும் 118 வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு இடம் பெற உள்ளன.