TNPSC Thervupettagam

தமிழகத்தின் அரிசித் தேவை

June 27 , 2023 390 days 205 0
  • இந்திய உணவுக் கழகமானது (FCI) அதன் திறந்தநிலைச் சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் மாநிலங்களுக்கு கூடுதல் உணவுத் தானியங்களை வழங்குவதாக இல்லை என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • தமிழ்நாடு பொது வழங்கீட்டுக் கழகமானது (TNCSC), ஒரு மாதத்திற்கு 50,000 முதல் 60,000 டன்கள் வரை கூடுதல் அளவிலான கொள்முதலைச் செய்வதற்காக இந்தியத் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் பிற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • மத்திய அரசானது, தமிழகத்திற்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பொது விநியோகத் திட்டத்திற்கு (PDS) மாதந்தோறும் சுமார் 2.97 லட்சம் டன் அரிசியை ஒதுக்குகிறது.
  • இந்த அளவை விட கூடுதலாக, மாநிலத்திற்குச் சராசரியாக, மாதத்திற்கு 50,000 டன் முதல் 60,000 டன் வரை அரிசி தேவைப்படுகிறது.
  • தமிழகத்தில் அரிசியினைப் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடையில், இது இந்தியத் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிடமிருந்து 3 லட்சம் டன்களை கொள்முதல் செய்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான காரீஃப் பருவப் பயிர்களின் சந்தைப்படுத்தல் பருவத்தில், உள்மாநிலத் தேவைகளுக்காக 7 லட்சம் டன்கள் மாநிலத்தினால் தக்க வைக்கப் பட்டது.
  • தற்போது, மாநிலத்தின் கிடங்குகளில் 5.4 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
  • இது தவிர, அரிசி ஆலைகளில் சுமார் 1.9 லட்சம் டன்கள் கையிருப்பாக உள்ள நிலையில், இவை இறுதியில் பொது விநியோகத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்