TNPSC Thervupettagam

தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவை

September 26 , 2023 298 days 215 0
  • தமிழகத்தின் மாலை நேர உச்சகட்ட மின் தேவையானது அக்டோபர் மாதத்தில் 16,200 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15,217 மெகாவாட்டாக இருந்தது.
  • உச்சகட்ட தேவை நேரங்களில் கிடைக்கப் பெறும் மின்சாரத்தின் அளவு அக்டோபர் மாதத்தில் 14,463 மெகாவாட்டாக இருக்கும்.
  • அக்டோபர் மாதத்திற்கான ஒட்டு மொத்த எரிசக்தித் தேவை 10,550 மில்லியன் அலகுகளாகவும், 10,788 மில்லியன் அலகுகளாகவும் இருக்கும்.
  • மத்திய மின்சார ஆணையத்தின் படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்  மாநிலத்தின் எரிசக்தித் தேவை 8,820 மில்லியன் அலகாக இருந்தது.
  • தென் மாநிலங்களிலேயே தமிழகம் தான் அதிக எரிசக்தி நுகர்வைக் கொண்டுள்ளது.
  • தமிழகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று 19,387 மெகாவாட் என்ற எப்போதும் இல்லாத உச்ச கட்டத் தேவைப் பதிவானது.
  • அதே நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 423.785 மில்லியன் அலகு என்ற அளவில் தினசரி நுகர்வு பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்