TNPSC Thervupettagam

தமிழகத்தின் கடன் நிலுவைகள்

December 19 , 2024 29 days 147 0
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, திறந்தநிலைச் சந்தைக் கடன்கள் மூலம் பெறப்பட்ட தமிழ்நாடு அரசின் நிலுவைக் கடன்கள் 6,00,993 கோடி ரூபாயாக உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த கடன்கள் நிலுவை 8,34,544 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்திற்கான ஒட்டு மொத்த நிலுவைக் கடன் 7,41,498 கோடி ரூபாயாகும்.
  • வட்டியின் அடிப்படையில் மாநிலத்தின் நிலுவை 28,263.67 கோடி ரூபாயாக இருக்கும்.
  • அடுத்த 10 ஆண்டுகளில் (2023-24 முதல்) சந்தைக் கடனின் அசல் தொகைக்கான கடன் தொகை 3,75,951.97 கோடி ரூபாயாக இருக்கும்.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையின் படி, 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் 1,55,584.48 கோடி ரூபாய் கடன் பெற்று, 49,638.82 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள கடன் மதிப்பு 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும்.
  • இது 2024-25 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 26.41% பங்கினைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்