TNPSC Thervupettagam

தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 2024-25

November 9 , 2024 13 days 113 0
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ஆனது சுமார் 14% அதிகரித்து 86,975.28 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் இது 76,257.13 கோடி ரூபாயாக இருந்தது.
  • தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது 75.6% ஆகும்.
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் மாநிலச் சரக்கு மற்றும் சேவை வரி (SGST) வசூல் ஆனது 20.12% அதிகரித்து 35,414.05 கோடி ரூபாயாக இருந்தது.
  • இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 29,481.97 கோடி ரூபாயாக இருந்தது.
  • 24.4% வருவாய் வரவுகள் ஆனது, மத்திய வரிகள் மற்றும் மத்திய அரசின் மானியங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது.
  • வருவாய்ப் பற்றாக்குறையானது, 2024-25 ஆம் ஆண்டு முதல் பாதியில் 28,717.51 ​​கோடி ரூபாயாக இருந்தது.
  • இதுவரையில் 2024-25 ஆம் ஆண்டில் (ஆகஸ்ட் மாதம் வரை) 41,000 கோடி ரூபாயுடன்  மொத்தச் சந்தைக் கடன்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
  • தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை தலா 40,000 கோடி ரூபாய் மொத்தக் கடன்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்