2021-22 ஆம் ஆண்டில் 35,690 மெகாவாட்டாக உள்ள தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின்னாற்றல் உற்பத்தித் திறன் ஆனது சுமார் 31.8% அதிகரித்து 2026-27 ஆம் ஆண்டில் 47,048 மெகா வாட்டாக அதிகரிக்கும்.
தமிழக மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி அதிகபட்சமாக 19,387 மெகா வாட் மின்னாற்றல் தேவையானது பதிவானது.
இது தென் மாநிலங்களில் அதிக மின் தேவையைக் கொண்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் பதிவான 16,891 மெகாவாட் என்ற உண்மையான மின்னாற்றல் தேவையுடன் ஒப்பிடும் போது, 2026-27 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உச்சக் கட்ட மின் தேவை 21,736 மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27 ஆம் ஆண்டில் மொத்த ஆற்றல் தேவையானது 1,44,0,86 அலகுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 13,685 மெகாவாட்டாக இருந்த மாநிலத்தின் நிலக்கரி சார்ந்த உற்பத்தி திறன் ஆனது 2026-27 ஆம் ஆண்டில் 18,128 மெகாவாட்டாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2,440 மெகாவாட்டாக இருந்த அணுசக்தி சார்ந்த மின்னாற்றல் உற்பத்தி திறன் ஆனது 5,940 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிற, அதே நேரத்தில் எரிவாயு மற்றும் புனல் மின்னாற்றல் சார்ந்த மின் உற்பத்தித் திறன் ஆனது தேக்க நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 9,871 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் நிறுவப்பட்ட காற்றாலை உற்பத்தி திறன் ஆனது 2026-27 ஆம் ஆண்டில் 12,556 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சூரிய சக்தி திறன் 2022 மார்ச் இறுதியில் 5,112 மெகாவாட்டிலிருந்து 2026-27 ஆம் ஆண்டில் 5,316 மெகா வாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் பசுமை எரிசக்தி மூலங்களில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் ஆற்றல் சேமிப்புத் திட்டங்களின் நிறுவப்பட்ட திறன் 900 மெகாவாட் ஆக இருக்கும் என்று அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் இந்தியாவில் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறன் ஆனது சுமார் 609.6 ஜிகாவாட் ஆக இருக்கும்.
ஒட்டு மொத்த மின்னாற்றல் தேவையானது 2,77,201 மெகாவாட்டாக இருக்கும்.