TNPSC Thervupettagam

தமிழகத்தின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன்

April 22 , 2025 6 days 53 0
  • இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 42,772.20 மெகாவாட் ஆகும்.
  • இது முந்தைய ஆண்டின் 39,805.97 மெகாவாட் அளவில் இருந்து அதிகரித்து வருகிறது.
  • இந்த ஆண்டு பதிவான மொத்தத் திறனில், நிலக்கரி மின் உற்பத்தித் திறனின் பங்கு 12,835.49 மெகாவாட் ஆகும்.
  • இதில் சுமார் 4,320 மெகாவாட் என்பது மாநிலத் துறையிலிருந்தும், 5,490.17 மெகாவாட் என்பது தனியார் துறையிலிருந்தும், 3,025.32 மெகாவாட் மத்திய துறையிலிருந்தும் பெறப் பட்டது.
  • தமிழ்நாட்டின் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தித் திறன் 1,959.16 மெகாவாட் ஆகும்.
  • 1,709.16 மெகாவாட் மத்தியத் துறையிலிருந்தும், 250 மெகாவாட் தனியார் துறையில் இருந்தும் பெறப்பட்டது.
  • எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறன் 1,027.18 மெகாவாட் ஆகும் என்பதோடு இதில் 524.08 மெகாவாட் மாநிலத் துறையிலிருந்தும் 503.10 மெகாவாட் தனியார் துறையிலிருந்தும் பெறப்படுகிறது.
  • மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகளின்படி, 1,448 மெகாவாட் அணு மின் உற்பத்தி திறன் மத்திய துறையிலிருந்து பெறப்பட்டது.
  • மார்ச் 31 ஆம் தேதி நிலவரப் படி, நமது மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான நிறுவப்பட்ட திறன் 25,290.67 மெகாவாட் ஆகும்.
  • இதில், 11,739.91 மெகாவாட் காற்றாலை ஆற்றலிலிருந்தும், 10,153.58 மெகாவாட் சூரிய சக்தியிலிருந்தும், 2,178.20 மெகாவாட் நீர் மின் நிலையங்களிலிருந்தும் பெறப்பட்டது.
  • 12,677.48 மெகாவாட் உற்பத்தித் திறனுடன், குஜராத் மாநிலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக காற்றாலை ஆற்றலில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்