கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலக் கட்டமான 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார மேம்பாடானது நிலையான (அடிப்படை ஆண்டின் விலையில்) விலையில் சுமார் 8% ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) நிலையான விலையில் 14,53,321 கோடி ரூபாயாகவும், 2022-23 ஆம் ஆண்டில் நடப்பாண்டு விலையில் 23,64,514 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இது 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் GSDP வளர்ச்சியானது நிலையான விலையில் 8.19% ஆகவும் நடப்பாண்டு விலையில் 14.16% ஆகவும் உள்ளது.
அதே காலக் கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது நிலையான விலையில் 7.24% ஆகவும், நடப்பாண்டு விலையில் 16.06% ஆகவும் இருந்தது.
2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் GSDP ஆனது நிலையான விலையில் 13,43,287 கோடி ரூபாயாகவும், நடப்பாண்டு விலையில் 20,71,286 கோடி ரூபாயாகவும் இருந்தது.
இது நிலையான விலையில் 7.92% ஆகவும் நடப்பாண்டு விலையில் 15.84% ஆகவும் உயர்ந்தது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 2021-22 ஆம் ஆண்டில் நிலையான விலையில் 9.05% ஆகவும், நடப்பாண்டு விலையில் 18.36% ஆகவும் இருந்தது.
மாநிலத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 50.94% ஆக இருந்த சேவைத் துறையின் பங்களிப்பு ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 50.92% ஆக உள்ளது.