சென்னை DMS அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணுப் பகுப்பாய்வு ஆய்வகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
முதன்முறையாக ஒரு மாநிலம் தனது சொந்த மரபணு ஆய்வகத்தை நிறுவியுள்ளது.
இந்த ஆய்வகமானது SARS-Cov-2 வைரசின் மாற்றுருக்களைக் கண்டறிய வேண்டி அதிகாரிகளுக்கு உதவும்.
கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மத்திய அரசினால் நடத்தப் படும் மரபணுப் பகுப்பாய்வு ஆய்வகங்களுக்கே கோவிட்-19 மாதிரிகள் இது வரை அனுப்பப்பட்டன.
மத்திய அரசின் பரிந்துரைகளின் படி, தமிழக அரசானது அனைத்து மாதிரிகளையும் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டெம் (Instem) என்னும் நிறுவனத்திற்கு அனுப்பி வந்தது.
இன்ஸ்டெம் என்பது INSACOG மன்றத்தின் (கோவிட் மாதிரிகளில் மாற்றுருக்களைக் கண்டறியும் 10 ஆய்வகங்களை கொண்ட மன்றமாகும்) ஓர் அங்கமாகும்.