தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் இந்தப் புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
இது ஆண்டுதோறும் 1450 எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு இடமளிக்கும்.
2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நிலவரப் படி, தமிழக அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையானது 3,550 ஆக இருந்தது.
சென்னைக்கு அருகில் பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் (CICT - Central Institute of Classical Tamil) புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.