தமிழகத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் 22,396 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு பதிவாகியுள்ளது.
இது 2020-21 ஆம் நிதியாண்டில் பதிவான 17,208 கோடி ரூபாயை விட 30.1% அதிகமாகும்.
22 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டுடன் கர்நாடகா முதலிடத்திலும், 15.4 பில்லியன் டாலர்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
டெல்லியில் சுமார் 8.2 பில்லியன் டாலர்களும், தமிழகத்தில் 3 பில்லியன் டாலர்களும் மற்றும் குஜராத்தில் 2.7 பில்லியன் டாலர்களும் அந்நிய நேரடி முதலீடு பதிவாகி உள்ளது.