கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்புக் காலத்தின் தொடக்கம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தொல்லியல் துறையானது, ‘மயிலாடும்பாறை - வேளாண் சமுதாயத்தின் ஆரம்பம்; தமிழகத்தில் 4,200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலகே கலாச்சாரம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
வயது கணக்கிடப்பட்ட காலத்தில் நிலமட்டத்திற்குக் கீழே 25 சென்டிமீட்டர் வரையில் கலாச்சாரத்தினைக் காட்டும் படிமங்கள் இருப்பதால், கி.மு 2200 ஆம் ஆண்டுக்கு முன் அங்கு கற்காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கலாச்சாரம் நிலவியதாகக் கண்டறியப் பட்டது.
கேரளாவின் பட்டணம், கர்நாடகாவின் தலக்காடு, ஆந்திராவின் வெங்கி மற்றும் ஒடிசாவின் பாலூர் ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு மேற் கொள்ளும் என்றும் அத்துறை அறிவித்தது.