TNPSC Thervupettagam

தமிழகத்தில் உடல் உறுப்பு தான தினம் - செப்டம்பர் 23

September 29 , 2024 15 hrs 0 min 16 0
  • 2008 ஆம் ஆண்டில், 15 வயதான A.P.ஹிதேந்திரனின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதியை உறுப்பு தான தினமாக அனுசரிக்கும் ஒரு வழக்கமானது தொடங்கியது.
  • 2008 ஆம் ஆண்டில் உயிரிழந்த பின்பான உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து, மாநிலத்தில் 1,998 கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • சுமார் 892 இதயங்கள், 912 நுரையீரல்கள், 1,794 கல்லீரல், 3,544 சிறுநீரகங்கள், 42 கணையங்கள், 15 சிறுகுடல்கள் மற்றும் ஏழு கைகள் உட்பட மொத்தம் 7,207 முக்கிய உறுப்புகள் இதுவரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப் பட்டு உள்ளன.
  • மொத்தம் 4,204 திசுக்கள் பெறப்பட்டு (மீட்டெடுக்கப்பட்டு) பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயிரிழந்த பின்பு உறுப்பு தானம் செய்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
  • அப்போதிலிருந்து, 1,461 உறுப்புகளைத் தானம் செய்த 272 நபர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
  • கடந்த 16 ஆண்டுகளில் 1,988 நபர்களிடமிருந்து 7,200 உறுப்புகள் பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்