தமிழகத்தில் உடல் உறுப்பு தான தினம் - செப்டம்பர் 23
September 29 , 2024 55 days 137 0
2008 ஆம் ஆண்டில், 15 வயதான A.P.ஹிதேந்திரனின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதியை உறுப்பு தான தினமாக அனுசரிக்கும் ஒரு வழக்கமானது தொடங்கியது.
2008 ஆம் ஆண்டில் உயிரிழந்த பின்பான உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து, மாநிலத்தில் 1,998 கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
சுமார் 892 இதயங்கள், 912 நுரையீரல்கள், 1,794 கல்லீரல், 3,544 சிறுநீரகங்கள், 42 கணையங்கள், 15 சிறுகுடல்கள் மற்றும் ஏழு கைகள் உட்பட மொத்தம் 7,207 முக்கிய உறுப்புகள் இதுவரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப் பட்டு உள்ளன.
மொத்தம் 4,204 திசுக்கள் பெறப்பட்டு (மீட்டெடுக்கப்பட்டு) பயன்படுத்தப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயிரிழந்த பின்பு உறுப்பு தானம் செய்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அப்போதிலிருந்து, 1,461 உறுப்புகளைத் தானம் செய்த 272 நபர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளில் 1,988 நபர்களிடமிருந்து 7,200 உறுப்புகள் பெறப்பட்டுள்ளது.