TNPSC Thervupettagam

தமிழகத்தில் காற்று மாசுபாடு

July 13 , 2023 373 days 239 0
  • 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் காற்று மாசுபாட்டில் நிலையான சரிவு பதிவாகி உள்ளது.
  • இந்த ஐந்தாண்டு காலத்தில், தமிழ்நாடு மாநிலத்தில் காற்றில் காணப்படும் நுண்மத் துகள்களின் அளவில் 22% சரிவு பதிவாகியுள்ளது.
  • தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், 2017 ஆம் ஆண்டில் 46.6㎍/க.மீ (ஒரு கன மீட்டருக்கு மைக்ரோகிராம்) PM 2.5 அளவானது 2022 ஆம் ஆண்டில் 32.9㎍/ க.மீ ஆகக் குறைந்து உள்ளது.
  • நகர்ப்புறங்களில், 2017 ஆம் ஆண்டில் 42.7 ㎍/க.மீ ஆக இருந்த PM 2.5 அளவு ஆனது, கடந்த ஆண்டில் 33.1 ㎍/க.மீ ஆக இருந்தது.
  • முக்கிய நகரங்களுள், சென்னையில் 2017 ஆம் ஆண்டில் 40.86㎍/m3 ஆக இருந்த PM 2.5 அளவானது, 2022 ஆம் ஆண்டில் 28.90㎍/ க.மீ ஆகக் குறைந்துள்ளது.
  • நுண்மத் துகள்களானது, 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள் என வரையறுக்கப்படுகிறது (PM 2.5).
  • தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள மூன்று நகரங்கள் – சென்னை, மதுரை மற்றும் தூத்துக்குடி – ஆகியவை மட்டுமே இலக்கினை அடையாத நகரங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்