TNPSC Thervupettagam

தமிழகத்தில் புலிகள் சரணாலயங்களைக் கண்காணிக்கும் பணியில் ஆளில்லா விமானங்கள்

July 30 , 2017 2804 days 1534 0
  • தமிழகத்தில் புலிகள் சரணாலயங்களைக் கண்காணிக்கும் பணியில் ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள 13 புலிகள் சரணாலயங்களில் இந்த ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை, களக்காடு-முண்டந்துறை என 4 புலிகள் சரணாலயங்கள் உள்ளன.
  • இந்த ஆளில்லா விமானங்கள், புலிகள் சரணலாயத்தில் உள்ள வனப் பாதுகாவலர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்குத்தான் இதனை இயக்குவதற்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் தமிழகத்தில் மிகப்பெரியதாகும். எனவே, இந்த ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியும், ஒத்திகையும் அங்கேயே தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
  • உலகளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்நியோ காடுகளிலும் நேபாளம், சீனா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் சில மேற்கத்திய நாடுகளிலும் வனங்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • மனிதர்கள் புக முடியாத காடுகளை ஆய்வு செய்தல், சந்தனக் கட்டைகள், செம்மரக்கட்டை உள்ளிட்ட வனக் கொள்ளையைத் தடுத்தல், வேட்டைத் தடுப்பு, காட்டுத்தீ தடுப்பு, வன விலங்குகளை கண்காணித்தல், நீர் நிலைகளைக் கண்காணித்தல், வனங்கள் குறித்த வரைபடங்களை தயாரித்தல், வனங்கள் விரிவாக்கம் மற்றும் அழிவுகளின்போது அவற்றை அளவிடுதல், அழியும் தருவாயில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் மரம், தாவரங்களைக் கண்டறிந்து பாதுகாத்தல், வனவிலங்கு கணக்கெடுப்பு, அவற்றின் பழக்க வழக்கங்களை கண்காணித்தல் போன்ற பணிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top