TNPSC Thervupettagam

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தனியார் துறை திட்டங்கள் 2022 - 23

August 29 , 2023 455 days 260 0
  • தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 40 என்ற அளவாக இருந்த, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் தனியார் துறைத் திட்டங்களின் எண்ணிக்கை என்பது 2022-23 ஆம் ஆண்டில் 44 ஆக அதிகரித்துள்ளது.
  • இருப்பினும், 2022-23 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த திட்ட மதிப்பான 2,66,547 கோடி ரூபாயில் தமிழக மாநிலத்தின் பங்கு 4.8% ஆகக் குறைந்துள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்தத் திட்ட மதிப்பான 1,41,976 கோடி ரூபாயில் தமிழகத்தின் பங்கு 8.8% ஆகும்.
  • ஒட்டு மொத்தமாக, 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 547 தனியார் துறை திட்டங்கள் அதிக பட்ச திட்டச் செலவின மதிப்பீட்டுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளன.
  • 2022-23 ஆம் ஆண்டில், முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், குஜராத், ஓடிஸா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியனவாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில், திட்டங்களுக்கான மொத்தச் செலவில் உத்தரப் பிரதேசம் 16.2 சதவிகிதப் பங்களிப்புடன் மிக உயர்ந்தப் பங்களிப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்