TNPSC Thervupettagam

தமிழகப் பொருளாதாரத்தின் தரவு

December 12 , 2022 588 days 551 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டின் நிகர சந்தைக் கடன்கள் (மறு சரிபார்ப்பிற்குப் பிறகு) சுமார் 30.3% குறைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலத்தில் 35,000 கோடி ரூபாயாக இருந்த இதன் அளவு 24,403 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசானது, மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் பெறுகிறது.
  • கடந்த ஆண்டு 85,209.74 கோடியாக இருந்த தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் ஆனது 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 1.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ₹18,726.32 கோடியாகவும், வருவாய்ப் பற்றாக்குறை ₹4,184.10 கோடி ஆகவும் இருந்தது.
  • 2023 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் நிதி உபரித் தொகைகள் பதிவாகியுள்ளன.
  • கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற சில பெரிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான நிதிப் பற்றாக்குறையே (நிதி நிலை மதிப்பீடுகளில் 30%க்கும் குறைவாக) பதிவாகியுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே தங்களது முழு ஆண்டு இலக்குகளை நிறைவு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்