TNPSC Thervupettagam

தமிழறிஞர் இரா. இளங்குமரனார் காலமானார்

August 2 , 2021 1270 days 1793 0
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்ற மூத்த தமிழறிஞரான இரா.இளங்குமரனார் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • அவருக்கு வயது 94 ஆகும்.
  • இவர் நெல்லை மாவட்டத்தில் வாழவந்தாள்புரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.
  • இவர் முழுமையாக கிடைக்கப் பெறாத குண்டலகேசி காப்பியத்தைத் தன்னுடைய கற்பனைத் திறனால் முழுமை செய்தவர் ஆவார்.
  • அவர் அந்நூலினை 1958 ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
  • 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதிய திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்ற நூலை அப்போதையப் பிரதமர் நேரு வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்