சிவகங்கை மாவட்டம் கீழடியில் இருந்து ‘த’ என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது மதுரையில் வைகை ஆற்றின் கரையில் சங்க காலத்தினைச் சேர்ந்த ஒரு நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதியாகும்.
10வது பருவத் தொல்பொருள் ஆய்வில் தமிழி (தமிழ்-பிராமி) பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டறியப்படுவது இது முதல் முறையாகும்.
மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் 2014 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிகள் முதன்முதலில் தொடங்கப் பட்டன.
இந்தத் தளம் ஆனது, ஒரு நகர்ப்புறத் தொழில்மயமான குடியேற்றம் இருந்ததைக் குறிப்பதற்குப் போதுமான பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்பதோடு இந்தத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில கலைப்பொருட்களின் கதிரியக்க கரிமக் காலக் கணிப்பு ஆனது, அதன் காலத்தினை 2,600 ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளது.