பள்ளி மற்றும் கல்லூரிகளில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயர்களின் முன்னெழுத்துகளை (initials) தமிழில் எழுதுவதைக் கட்டாயம் எனக் கூறி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது மக்கள் அரசாங்கப் பதிவேடுகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் சமயத்திலும் இந்த உத்தரவானது பொருந்தும்.
தமிழக மாநில அரசானது, ஏற்கனவே தனது பணியாளர்களைத் தங்களது பெயர் மற்றும் முன்னெழுத்துக்களைத் தமிழில் கையொப்பமிடுவதனைக் கட்டாயம் செய்து உள்ளது.