TNPSC Thervupettagam

தமிழ் அகராதியியல் தினம் - நவம்பர் 8

November 10 , 2019 1844 days 1390 0
  • நவம்பர் 8 ஆம் தேதியில் தமிழ்நாடு தனது முதலாவது “தமிழ் அகராதி தினத்தை” அனுசரித்தது.
  • இந்நாள் வீரமாமுனிவர் என்றும் அழைக்கப்படும் இத்தாலிய மதகுருமாரான  கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியின் பிறந்த நாளைக் குறிக்கின்றது.
  • முதல் தமிழ் அகராதியான சதுரகராதியை வெளியிடுவதற்கு அவர் காரணமாயிருந்தார்.
  • முன்னதாக, மொழி அறிஞர்கள் பயன்பாட்டில் இருந்த சொற்களை ஆவணப்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
  • அந்த சொற்கள் சேகரிப்பானது ‘நிகண்டு’ என்று அழைக்கப் பட்டது.

வீரமாமுனிவர் பற்றி

  • வீரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்தார்.
  • அவர் லத்தீன் மொழியில் "திருக்குறளை" மொழிபெயர்த்து விளக்கினார்.
  • தேவாரம், நன்னூல், ஆத்திச்சூடி போன்ற பல முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளையும் அவர் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்.
  • இவரது மிகப்பெரிய கவிதைப் படைப்பு நூல் தேம்பாவணி ஆகும்.
  • காவலூர் கலம்பகம் (ஒரு சிறிய இலக்கியம்), தொன்னூல் என்ற இலக்கணக் கட்டுரை, சமயப் பரப்பாளர்களுக்கான வழிகாட்டி நூலான வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருவின் கதை போன்றவற்றையும் அவர் இயற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்