TNPSC Thervupettagam

தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்

April 13 , 2018 2320 days 861 0
  • தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் தமிழ்சார் தொல்பொருளியல் மற்றும் கல்வெட்டு ஆய்வுகளுக்கும் குறிப்பிடத்தகு பங்களிப்பை அளித்த சிறந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக முதலமைச்சர் சித்திரைத் தமிழ் புது வருட விருதுகளை (Chithirai Tamil New Year Awards) வழங்கியுள்ளார்.
  • 2017ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது (Tamizhthai Award) பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • தொல்பொருள் ஆராய்ச்சி (Archaeology) மற்றும் கல்வெட்டு ஆய்வுத் (Epigraphy) துறையில் சிறப்பாக பங்காற்றியமைக்காக கே.வி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான கபிலர் விருது (Kabilar Award) வழங்கப்பட்டுள்ளது.
  • கையெழுத்துப் படியியல் (Manuscriptology) துறையில் குறிப்பிடத்தகு பணியாற்றியதற்காக கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான உ.வே.சா.விருது (U.Ve.Sa. Award) வழங்கப்பட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான கம்பர் விருது (Kambar Award) சுகி சிவம் அவர்களுக்கும், 2017ஆம் ஆண்டிற்கான சொல்லின் செல்வர் விருது வைகைச் செல்வன் (Sollin Selvar Award) அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • நல்லதம்பி அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருது (Elangovadigal Award) வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ் இலக்கியங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தமைக்காக 2017ஆம் ஆண்டிற்கான ஜி.யு.போப் விருது (U. Pope Award) K.ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2017ஆம் ஆண்டிற்கான உமறுப்புலவர் விருது (Umaruppulavar Award) ஹாஜி.M.முஹம்மது யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான அம்மா இலக்கிய விருது (Amma Literary Award)S.ஸ்ரீலட்சுமி அவர்களுக்கும், 2016 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் தமிழ் கணிமை விருது (Chief Minister’s Tamil Computing Award) Ultimate Software Solution எனும் நிறுவனத்தின் R.துரைப்பாண்டி அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • 2016-ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகளின் கீழ்.ஆண்டியப்பன் அவர்களுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2017ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகளில், இலக்கிய விருது ஆஸ்திரேலியாவின் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலக்கண விருதினை ஜெர்மனியின் அல்ரைக் நிகோலஸ் (Ulrike Nicholas) பெற்றுள்ளார். மஹாதேவ ஐயர், ஜெயராம் சர்மா ஆகியோர் மொழியியல் விருதினைப் (Linguistic Award) பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்