இந்திய அரசு தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கும் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியான சங்கீதா திங்ரா செஹல் என்பவரின் தலைமையின் கீழ் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.
இது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை (LTTE - Liberation Tigers of Tamil Eelam) சட்ட விரோத அமைப்பாக அறிவிப்பதற்கு போதிய காரணம் உள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து விசாரிக்கவிருக்கின்றது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் LTTE மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதற்கான அறிவிக்கையை வெளியிட்டது.
1991-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் LTTE அமைப்பானது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.