தமிழ்நாடு அரசானது 2025 ஆம் ஆண்டு முதல் இந்த நாளினை ‘தமிழ் மொழி தியாகிகள் நாள்’ ஆக அனுசரிக்க உள்ளது.
1939 ஆம் ஆண்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இத்தினம் நினைவுகூர்கிறது.
1938 ஆம் ஆண்டில், தமிழ்நாடு பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது 1938 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதியன்று ஒரு மொழி இயக்கம் உருவாக வழி வகுத்தது.
இந்த இயக்கத்தின் போது, தஞ்சாவூரைச் சேர்ந்த தாளமுத்து மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த நடராசன் ஆகியோர் கைது செய்யப் பட்டு இறுதியில் காலமானார்கள்.