TNPSC Thervupettagam

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

July 22 , 2021 1281 days 698 0
  • தமிழக மாநில அரசுப் பணி நியமனங்களில் தமிழ் வழியில் பயின்ற மாணாக்கர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையானது மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை (அ) குறிப்பிடப்பட்ட உயர்கல்வி வரை முழுவதும் தமிழ் வழியில் பயின்ற மாணாக்கர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழான 20% இடஒதுக்கீட்டினைப் பெற தகுதியுடையவர்கள் என்பதையும் உயர்நீதிமன்றக் கிளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
  • தமிழ்நாடு பொதுப்பணி தேர்வாணையத்தின் செயலாளர், 2020 ஆம் ஆண்டு குரூப் I பணி சேர்ப்பில் இந்த ஆணையை அமல்படுத்துவதிலிருந்து ஆணையத்திற்கு விலக்கு அளிக்குமாறு கோரினார்.
  • ஏனெனில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குரூப் I பணி சேர்ப்பு அறிவிக்கப் பட்டதாக தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
  • ஆனால் தற்போதைய குரூப் I பணி சேர்ப்பிலும் (2020) இந்த ஆணையை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்