திருவாங்கூர் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞருமான மறைந்த பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட கவிதையானது தமிழக அரசின் நிகழ்ச்சிகளுக்கான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் நாடகமான “மனோன்மணியம்” என்பதிலிருந்து “நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடலின் இரண்டு பத்திகளை அது கொண்டுள்ளது.
இந்தப் பத்தியின் முதல் ஆறு வரிகள் மட்டுமே மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் நோக்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்த அறிவிப்பானது அப்போதைய முதல்வரான திரு. மு. கருணாநிதி அவர்களால் 1970 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று வெளியிடப்பட்டது.