‘தமிழ்நாடு அன்லிமிடெட்’ என்பது வழிகாட்டுதல் தமிழ்நாடு முகமையுடன் இணைந்து தி இந்து பத்திரிக்கை நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு நாள் அளவிலான உச்சிமாநாடு ஆகும்.
இது தமிழ்நாட்டை ஒரு விரும்பத்தகு வளர்ச்சி சார் இடமாக உருவாக்குவதில் பல்வேறு துறைகளின் திறனை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சுமார் 50% பங்கினைக் கொண்டுள்ளன.
இதனுடன் ஒப்பிடுகையில், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு முதல் மூன்று மாவட்டங்கள் அந்தந்த மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதியைப் பங்களிக்கின்றன.
தமிழ்நாட்டின் 50% நகரமயமாக்கலுக்கு 15 மாவட்டங்கள் பங்களித்துள்ளன.
ஓசூர் மண்டலமானது மின்சார வாகன மையமாகவும் தூத்துக்குடி பசுமை ஹைட்ரஜன் மையமாகவும் உருபெற உள்ளன.