மூத்தக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனை (88) 2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதிற்கு மாநில அரசு தேர்வு செய்துள்ளது.
அகில இந்திய தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் மீனாட்சிசுந்தரம் (78) திருவள்ளுவர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் இவர் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.