தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி
June 19 , 2023
526 days
251
- 2018 ஆம் ஆண்டில் 22.1% ஆக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சி விகிதமானது 2023 ஆம் ஆண்டில் 30.6% ஆக அதிகரித்துள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 14,979 ஆக இருந்த தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் 13% குறைந்து 12,997 ஆகக் குறைந்துள்ளது.
- 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 6,000 மட்டுமே ஆகும்.
- 4,32,231 உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில் 1,31,519 (30.4%) பேர் மட்டுமே இந்த ஆண்டு நீட் தேர்வினை எழுதினர்.
- ஒப்பீட்டளவில், 3,71,154 அரசுப் பள்ளி மாணவர்களில் 12,997 (3.5%) பேர் மட்டுமே இந்த ஆண்டு நீட் தேர்வினை எழுதினர்.
Post Views:
251