பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, விண்வெளி சார் சிகிச்சையில் தனது ஆராய்ச்சி பற்றி உரையாற்றுவதற்காக என்று கடந்த ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் இந்த இளம் அறிவியலாளர் பரிந்துரை செய்து வைக்கப் பட்டார்.
தென் கொரிய நாட்டின் யோன்செய் பல்கலைக்கழகத்தினால் சுவாதிக்கு சமீபத்தில் கௌரவ குறுகிய கால/வருகை புத்தாய்வு மாணாக்கர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
அவரது குழுவானது, எலும்புப் புரை நோயைத் தடுப்பதற்கு என நுண் பொருள் சார்ந்த சிகிச்சைகளை உருவாக்கி வருகிறது.
விண்வெளியில் நுண் ஈர்ப்பு விசை நிலையில் பணி புரிகின்ற விண்வெளி வீரர்கள் எலும்புப் புரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.