1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவுச் சேவை நிறுவனங்கள் சட்டத்தினைத் திருத்தி யமைப்பதற்கான மசோதாவினைத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
சிறைத்தண்டனையை நீக்குவதையும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றங்கள் தொடர்பான விதிகளை மீறியதற்காக அபராதம் மட்டும் விதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறு குற்றங்கள் தொடர்பான விதிமுறைகளை மீறினால், "சிறை தண்டனை விதிக்கும் ஒரு செயல்முறையினை நீக்கி, அபராதத்தினை மட்டும் தண்டனையாக வழங்க" அரசு முடிவு செய்துள்ளது.
இது உணவுச் சேவை நிறுவனங்களின் முதலாளிகள், உணவுச் சேவைத் தொழிலை மேற்கொள்வதை எளிதாக்கும்.
முன்னதாக, 3-A, 4, 5, 6, 11-A மற்றும் 14-A ஆகிய பிரிவுகளின் சில விதிகளை மீறினால் சிறைத் தண்டனை விதிப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்தது.