TNPSC Thervupettagam

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு - முதல் நாள்

January 9 , 2024 192 days 314 0
  • தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு ஆனது சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
  • முந்தைய இரண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்புகள் ஆனது 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றது.
  • உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு ஆனது, பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கியாக செயல்படும்.
  • இந்நிகழ்வு ஊக்கமளிக்கும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் தமிழகத்திற்குப் பெருமையையும் அதிக முதலீட்டையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த நிகழ்வில் தமிழக அரசால் பல கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சூரிய சக்தி உற்பத்தி ஆலையை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்த நிகழ்வு முழுவதும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • தூத்துக்குடியில் ஓர் ஆலையை அமைப்பதற்காக, வின்ஃபாஸ்ட் எனப்படும் வியட்நாம் நாட்டின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.
  • டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆனது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதனக் கவச மூடுறைகள் உற்பத்தி மற்றும் கைபேசி செயலி பாக ஒருங்குசேர்ப்பு அலகு ஒன்றை அமைப்பதற்காக 12,082 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளக எரிப்பு என்ஜின் (ICE) மற்றும் மின்சார வாகன பயணியர் பயன்பாட்டு மகிழுந்துகள் மற்றும் மின்சார வாகன மின் கலங்கள் தயாரிக்கும் ஓர் உற்பத்தி அலகினை அமைப்பதற்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆனது, 6,180 கோடி ரூபாய் கூடுதல் முதலீடுகளைச் செய்துள்ளது.
  • இது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, "ஹைட்ரஜன் தொடர்பான புத்தாக்கம்" (ஹைட்ரஜன் சார்ந்த திட்டங்கள் மீது கவனம் செலுத்தும் பகுதி) தொடர்பாக ஒத்துழைப்பினை மேற்கொள்ள உள்ளது.
  • குவால்காம் நிறுவனமானது அதன் வடிவமைப்பு மையத்திற்கான புதிய மையத்தினைச் சென்னையில் நிறுவ உள்ளதாக அறிவித்ததன் மூலம் அதன் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினை அறிவித்துள்ளது.
  • ஆப்பிள் நிறுவனத்தின் விநியோக நிறுவனமான பெகாட்ரான், செங்கல்பட்டில் உள்ள கணினி மையம், தகவல் தொடர்பு மற்றும் நுகர்வோர் பயன்பாட்டு மின்னணு சாதன உற்பத்தி அலகினை நிறுவதற்காக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • JSW எனர்ஜி நிறுவனமானது, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டினை மேற்கொள்ள உள்ளது.
  • கோத்ரேஜ் நுகர்வோர் பயன்பாட்டு தயாரிப்புகள் லிமிடெட் நிறுவனம் ஆனது, சுமார் 515 கோடி ரூபாயும், TVS குழுமம் 5,000 கோடி ரூபாயும் முதலீடு செய்வதன் மூலம் சுமார் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளது.
  • சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டியில் ஓர் ஆலையினை அமைப்பதற்காக மிட்சுபிஷி நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
  • AP மோல்லேர் மேயேர்ஸ்க் நிறுவனம் ஆனது, தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து மற்றும் தளவாட தீர்வுகள் மற்றும் உலக திறன் சார் ஆதரவு வழங்கீட்டு மையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது, அந்நிறுவனம் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொழில்துறைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக உறுதி பூண்டுள்ளது.
  • ஜியோ நிறுவனம் ஆனது தமிழ்நாட்டில் 35,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ததன் மூலம், எண்ணிமப் புரட்சியின் பலன்களை மாநிலத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்தில் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது.
  • கோத்ரேஜ் நுகர்வோர் பயன்பாட்டுத் தயாரிப்புகள் லிமிடெட் என்ற நிறுவனம் ஆனது, செங்கல்பட்டு மையத்தினை "ஒரு வழிகாட்டும் தொழிற்சாலையாக" மேம்படுத்த விரும்புவதாக கூறுகிறது.
  • இங்கு "நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தானியங்கு வாகன உற்பத்தி ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகள் உள்ளார்ந்த மற்றும் பாலினச் சமநிலையுடன் கூடிய பணியாளர் வளங்களுடன் மேற்கொள்ளப்படுகிறது”.
  • மகளிர் பிரிவில் இருந்து குறைந்தபட்சம் 50% ஊழியர்களையும், LGBTQI சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவிலிருந்து 5% ஊழியர்களையும் பணியமர்த்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் அடிப்படையில் அரசாங்கம் ஊக்கத் திட்டங்களை வழங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்