TNPSC Thervupettagam

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள்

October 19 , 2019 1737 days 818 0
  • பின்வரும் பதவிகளுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • பேரூராட்சிப் பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்கள்,
    • நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் உறுப்பினர்கள்,
    • நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் தலைவர்கள்,
    • மாநகராட்சிகளின் மேயர்கள்,
    • ஒன்றியப் பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்கள்,
    • மாவட்டப் பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்கள்.
  • தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் பிற மாநகராட்சிகள் நேரடியாக அந்தந்த மேயர்களுக்கு வாக்களிக்கவுள்ளன.
  • மாநகராட்சிகளுக்கான மேயர்களின் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு இனி வாக்களிக்க மாட்டார்கள்.
  • பின்வரும் தேர்தல்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த இருக்கின்றது.
    • கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்,
    • கிராமப் பஞ்சாயத்து தலைவர்,
    • ஒன்றியப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்,
    • மாவட்டப் பஞ்சாயத்து  உறுப்பினர்.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் அவர்களின்  உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
    • மாநகராட்சி வார்டு உறுப்பினர்
    • மாநகராட்சி மேயர்
    • பேரூராட்சிப் பஞ்சாயத்து தலைவர்
    • நகராட்சித் தலைவர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்