TNPSC Thervupettagam

தமிழ்நாடு எரிசக்தி திட்டம் 2023

October 9 , 2023 285 days 268 0
  • இந்த ஆண்டில், காற்றாலை உற்பத்தித் திறனை மேலும் 5,000 மெகாவாட் அளவிற்கு அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • தற்போது, மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை ஆற்றல் உற்பத்தித் திறன் 10,225 மெகாவாட் ஆகும்.
  • திட்டமிடப்பட்ட இந்த 5,000 மெகாவாட் உற்பத்தித் திறனில், 4,400 மெகாவாட் புதிய நிறுவனங்களாலும், 600 மெகாவாட் ஏற்கனவே உள்ள நிறுவனங்களாலும் வழங்கப் படும்.
  • தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை ஆற்றலில் கிட்டத்தட்ட 65% ஆற்றல் அந்தந்த நிறுவனங்களின் நுகர்விற்காகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது மூன்றாம் தரப்பு தொழில்துறை அல்லது வணிக வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது 35% ஆற்றலை மட்டுமே கொள்முதல் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்