TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீடு

February 13 , 2024 157 days 266 0
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீடு என்பது தமிழ்நாடு மாநில வனத் துறையால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • 6,80,028 என்ற மொத்தப் பறவை எண்ணிக்கையில் சுமார் 79 சதவீதம் நீர் வாழிடம் சார்ந்த பறவைகள் ஆகும்.
  • சுமார் 21 சதவீதம் நிலம் சார் வாழிடப் பறவைகள் ஆகும்.
  • வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 உள்ளிட்ட சதுப்பு நிலங்கள் /நீர்நிலைகள்/பறவைகள் சரணாலயங்களில் 894 சாதகமானப் பகுதிகளை இந்த மதிப்பீடு உள்ளடக்கியது.
  • 389 பறவை இனங்களைச் சேர்ந்த மொத்தம் 6,80,028 பறவைகள் இந்த மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவற்றில் 120 இனங்கள் நீர் வாழிடப் பறவைகளாகவும் மீதமுள்ள 269 இனங்கள் நில வாழிடப் பறவை இனங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்