TNPSC Thervupettagam

தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மறுசீரமைப்பு பணி

January 14 , 2024 187 days 291 0
  • தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மறுசீரமைப்புப் பணியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டத்திற்கான செலவினம் சுமார் 1,675 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது கடலோரங்களில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தை வலுப்படுத்துதல், நிலையான நடவடிக்கை வழியான சுற்றுலா மூலம் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கடல் சூழல்களில் காணப்படும் நெகிழிக் கழிவுகளை குறைத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • இந்தப் பணியானது முக்கிய கவனம் செலுத்த வேண்டிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது:
  • கடலோரங்களில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துதல்;
    • கடலோரப் பாதுகாப்பு;
    • நீலக் கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகள் மற்றும் நிலையான நடவடிக்கை வழியான சுற்றுலா வசதியை உருவாக்குவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்; மற்றும்
    • மாசு குறைப்பு.
  • பின்வரும் பணிகளுக்காக தமிழ்நாடு நீல (கடல் சார்) கரிம முகமை என்ற சிறப்பு நோக்க முகமையானது நிறுவப்பட உள்ளது:
    • சதுப்புநிலங்கள் மற்றும் கடற்புல் ஆகியவற்றைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான நடவடிக்கையினை கண்காணித்தல்;
    • கடல் அலை அரிப்பினைக் கட்டுப்படுத்துதல்; மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் அமைப்பின் கரியாச்சல்லி தீவுகளில் உள்ள பவளப்பாறைகளை புத்துயிர் பெறச் செய்தல் மற்றும்
    • கடலோர மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்துதல்.
  • இந்தப் பணியானது முன்னதாக தொடங்கப்பட்ட பின்வரும் திட்டங்களையும் உள்ளடக்கியது
    • செங்கல்பட்டில் உள்ள கடம்பூரில் பல்லுயிர் மற்றும் வளங்காப்புப் பூங்காவினை அமைத்தல்;
    • நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை வளங்காப்பு மையங்கள்; மற்றும்
    • தஞ்சாவூர் மனோரா எனுமிடத்தில் உள்ள சர்வதேச துகோங் வளங்காப்பு மையம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்