தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரிச் சட்டம், 2024
March 16 , 2025 17 days 64 0
மாநிலச் சட்டமன்றமானது, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிக்கும் சட்டத்தினை நிறைவேற்றியது என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தச் சட்டம் ஆனது சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களை அகழ்ந்து எடுப்பதற்கு மெட்ரிக் டன்னுக்கு 160 ரூபாய் என்ற விகிதத்தில் வரி விதிக்கிறது.
இந்தச் சட்டத்தின் நோக்க எல்லைகளைப் பூர்த்தி செய்வதற்கான பல்வேறு விதிகளை அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லை.
அவ்விதிகள் ஆனது வரி விதிப்பு, மதிப்பீடு மற்றும் வரி வசூல் முறை, வரி செலுத்தும் முறை போன்றவற்றை வழங்கும் வகையில் இருக்கும்.