தமிழ்நாடு காப்பு நிறுவனங்களின் செயல்பாட்டு மதிப்பீட்டு மாதிரி அறிக்கை
March 4 , 2024 265 days 262 0
தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) அமைச்சகம் ஆனது தமிழ்நாடு காப்பு நிறுவனங்களின் செயல்பாட்டு மதிப்பீட்டு மாதிரியை (TNIMM) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மாநிலம் முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனக் காப்பகங்களை மதிப்பிடச் செய்வதற்கான ஒரு கட்டமைப்பாகும்.
ஒரு காப்பு நிறுவனமானது, ஆதரவு, வளங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கச் செய்வதன் மூலம் ஆரம்ப-நிலை புத்தொழில் நிறுவனங்களின் பெரு வளர்ச்சிக்கு உதவுகிறது.
காப்பு நிறுவனங்கள் தங்களைச் சிறந்த செயல்திறன் கொண்ட காப்பு நிறுவனங்களுடன் ஒப்பிட்டுத் தங்கள் தரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, தமிழக மாநிலத்தை இந்தியாவின் விருப்பமிகு புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பாக மாற்றுவதையும், உலகளாவிய அமைப்புகளிடையே அதிகப் போட்டி தன்மையுடன் அதை நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
புத்தொழில் நிறுவனங்களைப் பொருத்தமான காப்பு நிறுவனங்களுடன் இணைக்கச் செய்வதற்காக ‘புத்தொழில் நிறுவனங்கள் TN செயலூக்கி’ என்ற பிரத்தியேக இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது.