TNPSC Thervupettagam

தமிழ்நாடு காப்பு நிறுவனங்களின் செயல்பாட்டு மதிப்பீட்டு மாதிரி அறிக்கை

March 4 , 2024 137 days 185 0
  • தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) அமைச்சகம் ஆனது தமிழ்நாடு காப்பு நிறுவனங்களின் செயல்பாட்டு மதிப்பீட்டு மாதிரியை (TNIMM) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது மாநிலம் முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனக் காப்பகங்களை மதிப்பிடச் செய்வதற்கான ஒரு கட்டமைப்பாகும்.
  • ஒரு காப்பு நிறுவனமானது, ஆதரவு, வளங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கச் செய்வதன் மூலம் ஆரம்ப-நிலை புத்தொழில் நிறுவனங்களின் பெரு வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • காப்பு நிறுவனங்கள் தங்களைச் சிறந்த செயல்திறன் கொண்ட காப்பு நிறுவனங்களுடன் ஒப்பிட்டுத் தங்கள் தரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, தமிழக மாநிலத்தை இந்தியாவின் விருப்பமிகு புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பாக மாற்றுவதையும், உலகளாவிய அமைப்புகளிடையே அதிகப் போட்டி தன்மையுடன் அதை நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • புத்தொழில் நிறுவனங்களைப் பொருத்தமான காப்பு நிறுவனங்களுடன் இணைக்கச் செய்வதற்காக ‘புத்தொழில் நிறுவனங்கள் TN செயலூக்கி’ என்ற பிரத்தியேக இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்