தமிழ்நாடு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் OBC பிரிவினர்
February 26 , 2025 6 days 91 0
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (RLB) இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒட்டு மொத்தப் பங்கு 12.39% ஆகும்.
இந்தப் பிரிவினரின் பங்கு கிராமப் பஞ்சாயத்துகளில் 12.16% ஆகவும்; பஞ்சாயத்து ஒன்றியங்களில் 15.42% ஆகவும் மற்றும் மாவட்டப் பஞ்சாயத்துகளில் 17.25% ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, அனைத்து மட்டங்களில் மகளிருக்கான 57.3% அளவிலான இட ஒதுக்கீட்டைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
RLB அமைப்புகளின் மூன்று நிலைகளில், இந்தப் பங்குகள் ஆனது 57.2%, 58.07% மற்றும் 55.41% ஆகும்.
தமிழ்நாடு மாநிலத்தில், மாநில மக்கள்தொகையில், பல்வேறு சாதிச் சமூகங்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு மற்றும் மற்றும் பெண்களுக்கு (50% அளவிலான கிடை மட்ட ஒதுக்கீடு) மட்டுமே ஒதுக்கீடு உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி நிலவரப்படி, "இடஒதுக்கீடு இல்லாத பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளின்" பங்கின் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:
கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவர் பதவிகளில் 65%;
கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளின் மன்ற உறுப்பினர்களில் 72%;
பஞ்சாயத்து தொழிற்சங்கங்களின் மன்ற உறுப்பினர்களில் 76%
மற்றும் மாவட்டப் பஞ்சாயத்துகளின் மன்ற உறுப்பினர்களில் 72%.