தமிழ்நாடு - கேரள பரம்பிக்குளம் ஆழியார் திட்ட மறு ஆய்வு
September 26 , 2019 1943 days 773 0
பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் (Parambikulam Aliyar Project - PAP) ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய கேரளாவும் தமிழகமும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பிலிருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட செயலாளர் மட்டத்திலான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
கூடுதலாக, இடமலையார் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆனைமலையாரில் இருந்து தண்ணீரைத் திருப்புவதற்கான தமிழகத்தின் கோரிக்கையை 10 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு ஆராய இருக்கின்றது.
மேலும் தமிழ்நாட்டினால் நிர்வகிக்கப்படும் முல்லைப் பெரியார் அணைக்கு மின்சாரம் வழங்கவும் கேரள அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதுபற்றி
PAP ஒப்பந்தமானது, 1970 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி இத்திட்டமானது 1958 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இது 30 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றாலும், 1988 ஆம் ஆண்டில் இந்த இரு மாநிலங்களும் பல சுற்று சந்திப்புகளில் பங்கேற்ற போதிலும் இரு மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஒன்று எட்டப்பட வில்லை.