ஐந்தாவது தமிழ்நாடு காவல் துறை ஆணையம் ஆனது, நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்க உயிரிழந்தவர்களின் உடல்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக 'தமிழ்நாடு சடலத்திற்கான மரியாதை செலுத்துதல் சட்டம்' இயற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இது சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ சடலங்களுடன் இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது ஆதரவாளர்கள் இழப்பீடு அல்லது காவல்துறையின் உடனடி நடவடிக்கை கோரி நடத்தும் போராட்டங்களை தடை செய்யும்.
இது போன்ற எந்தவொரு செயலும் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஏற்கனவே ராஜஸ்தான் மாநில அரசு 2023 ஆம் ஆண்டில் சடலத்திற்கான மரியாதை செலுத்துதல் சட்டத்தை இயற்றியுள்ளது.