தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் பரமசிவன் சுப்பராயன் ஆகியோரின் அசல் உருவப் படங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் திறக்கப் படும் என்று சமீபத்தில் அறிவித்து உள்ளார்.
இதற்கு முன்பு அவர் 2019 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மாநிலத்தின் சட்டமன்றத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
எஸ் எஸ் ராமசாமி படையாச்சியார் அவர்களின் உருவப்படமானது சட்டமன்றத்தில் திறந்து வைக்கப் பட்ட 12வது உருவப் படமாகும்.
இவர் 1952 ஆம் ஆண்டில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தொடங்கினார்.
1954 ஆம் ஆண்டில் இவர் மறைந்த K காமராஜர் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு அமைச்சராகப் பணியாற்றினார்.
1948 ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, K. காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா, காயிதே மில்லத், எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்கள் திறந்து வைக்கப் பட்டுள்ளன.