மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வேண்டி தமிழ்நாடு அரசு சிறப்புப் புத்தொழில் நிதியை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய கால தொழில்முனைவோர் மேம்பாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலான வளர்ச்சியை அடைய அவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வடிவிலான ஒரு சிறப்பு நிதி அறிமுகப்படுத்தப்படும், என்பதோடு இந்தத் திட்டத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் திட்டம் (StartupTN) இதற்கான பயனாளிகளை அடையாளம் காணும்.
கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய பிராந்தியப் புத்தொழில் நிறுவன மையங்கள் நிறுவப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பிராந்திய புத்தொழில் நிறுவன மையங்கள் நிறுவப் பட்டுள்ளன.