TNPSC Thervupettagam

தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023

September 30 , 2023 423 days 489 0
  • தமிழக முதல்வர் அவர்கள் ‘2023 ஆம் ஆண்டு சுற்றுலாக் கொள்கையினை’ வெளியிட்டு உள்ளார்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறையில் 20,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த விரிவான கொள்கையானது புதிய, பசுமைத் துறை சார்ந்த திட்டங்களை நிறுவச் செய்வதோடு, தற்போதுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பினை தரம் உயர்த்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய இரண்டையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது, தற்போது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது புதியக் கொள்கை அறிவிக்கப்படும் வரை செல்லுபடியாகும்.
  • இது தகுதியான சுற்றுலாத் துறை சார் திட்டங்களுக்குத் தேவையான அனுமதிகள், மின்சாரக் கட்டணத்தில் சலுகைகள் மற்றும் பிற சலுகைகளைப் பெறுவதற்கான ஒரு ஒற்றைச் சாளர இணைய தளத்தினை உருவாக்க உள்ளது.
  • இது ஒரு சுற்றுலாப் பாதுகாப்பு அமைப்பையும் நிறுவ வழி வகை செய்கிறது.
  • இந்தத் துறையானது, ஆண்டுதோறும் மாநில மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 12% பங்களிப்பினை அளிக்கும் ஒரு இலக்கினை உள்ளடக்கிய அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
  • மேலும், சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்த துணைத் தொழில்துறைகள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெறுவர்.
  • சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டைக் கண்காணிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்-தமிழ்நாடு முகமைக்கு உதவுவதற்காக அந்தத் துறைக்குள்ளேயே சுற்றுலா வசதி மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கப்படும்.
  • டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற உலகளாவிய கருப்பொருள் சார்ந்த விளையாட்டுப் பூங்காக்கள் (தீம் பார்க்) போன்று, சென்னையின் புறநகர்ப் பகுதியில் குறைந்தது 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றை உருவாக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
  • சென்னை – இராமேஸ்வரம் - கன்னியாகுமரி மற்றும் சென்னை - போர்ட் பிளேர் வழித் தடத்தின் பல்வேறு இடங்களில் பயணியர் கப்பல் வசதிகளைத் தொடங்குவதற்கான திட்டங்களும் இந்தக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
  • நல்ல தரமான நகர்ப்புற உள்கட்டமைப்பு கொண்ட சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆனது தமிழகத்திற்கு வருபவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்ற முக்கிய நுழைவாயில் மையங்களாக உருவாக்கப்படும் என்றும் இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகியவை முக்கிய நுழைவாயில் மையங்களாக உருவாக்கப்படும்.
  • முதன்மை நுழைவாயில் மையங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தச் செய்வதற்காக பொலிவுறு நகரங்கள் நிதியில் இருந்து 5% நிதி ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்