TNPSC Thervupettagam

தமிழ்நாடு சூரிய மின்சக்திக் கொள்கை

February 8 , 2019 1988 days 2226 0
  • 2022ம் ஆண்டிற்குள்ளாக மாநிலத்திற்காக 9000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திட எண்ணும் ஒரு புதிய “சூரிய மின்சக்திக் கொள்கை 2019” என்பதை தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்றது.
  • 2012ம் ஆண்டில் இதே போன்ற ஒரு கொள்கையுடன் வெளியிடப்பட்ட ஆவணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட ‘தொலைநோக்குப் பார்வை 2013’ என்ற ஆவணத்துடன் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவித்து இருக்கின்றது.
  • இந்த புதியக் கொள்கையின்படி ‘தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023’ என்ற ஆவணம் சூரிய மின்சக்தி இலக்கான 5000 மெகாவாட்டையும் உள்ளடக்கியதாகும்.
  • மொத்தமுள்ள இலக்கான 9000 மெகாவாட்டில், 40 சதவிகிதம் நுகர்வோர் பிரிவைச் சேர்ந்த சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்