TNPSC Thervupettagam

தமிழ்நாடு சொத்து வரி திருத்தம்

July 29 , 2018 2311 days 1254 0
  • பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து நகராட்சி அமைப்புகளில் வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரியை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கு மிகாமல் என்ற வீதத்தில் 26 ஜூலை 2018 அன்று தமிழக அரசு குறைத்துள்ளது.
  • எனினும், மற்ற குடியிருப்பு கட்டிடங்களின் 50% சொத்துவரி உயர்வு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களின் 100% சொத்துவரி உயர்வு ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.
  • இந்த புதிய விகிதங்கள் ஏப்ரல் - செப்டம்பர் 2018-ன் அரையாண்டு காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கும்.
  • இந்த புதிய சொத்துவரி விகித அமைப்பு முறை பரந்த சென்னை மாநகராட்சி, மற்ற 11 மாநகராட்சி மன்றங்கள், 124 நகராட்சிகள் மற்றும் 528 நகர பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
  • சென்னையில் இதற்கு முன்பு கடைசியாக சொத்துவரி 1998ம் ஆண்டு திருத்தப்பட்டது.
  • சென்னையைத் தவிர மற்ற அனைத்து நகராட்சி அமைப்புகளிலும் இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு சொத்து வரி திருத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்